ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி: 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
சென்னை, செப்டம்பர் 26 – ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) மொத்தம் 3,190 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் காலாண்டு விடுமுறையையும் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 565 பேருந்துகளும், திங்கட்கிழமை 190 பேருந்துகளும், செவ்வாய்க்கிழமை 885 பேருந்துகளும் இயக்கப்படும். இன்று, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு […]