
நாகை, வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த விழா செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறும், இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பங்கேற்பார்கள்.
இந்த நிலையில், கொடியேற்ற தினத்தை முன்னிட்டு, வரும் 29ம் தேதி, நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் பி. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.