இன்றைய ராசிபலன் (20-05-2026)
மேஷம் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள். ரிஷபம் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள். […]