இன்றைய ராசிபலன் (05-05-2026)
மேஷம்
குடும்பத்தில் இருந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். காதில் வாங்காதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
மிதுனம்
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். தாய்மாமன் வழியில் வீண் பிரச்னைகளும் செலவுகளும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும்.
கடகம்
எதிர்பார்க்கும் காரியம் சாதகமாக முடியும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. செலவுகளில் திட்டமிடுதல் அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
சிம்மம்
புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. தந்தைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக் கும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
கன்னி
எதிலும் நிதானத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
துலாம்
திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆலோசனையை ஏற்றுக் கொள்வது நல்லது. கவனம் தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
தனுசு
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
மகரம்
திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கும்பம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
மீனம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.
0 கருத்துக்கள்