சினிமா

‘ரோமியோ’ படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் ‘ரோமியோ’. இந்த படத்தில் மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரோமியோ திரைப்படம் கடந்த மாதம் ரம்ஜான் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வரும் 10-ம் தேதி அமேசான் பிரைம்வீடியோ மற்றும் ஆஹாவில் வெளியாக உள்ளதாக விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + two =

Back to top button
error: