ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (20-05-2024)

இன்றைய நாள் (20-05-2024) :

குரோதி-வைகாசி 7-திங்கள்-வளர்பிறை

நல்ல நேரம்

காலை 6:30 – 7:30

மாலை 4:30 – 5:30

கௌரி நல்ல நேரம்

காலை 9:30 – 10:30

மாலை 7:30 – 8:30

நட்சத்திரம்

இன்று அதிகாலை 04.09 வரை அஸ்தம் பின்பு சித்திரை

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

சதயம்

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

கும்பம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று சிலருக்கு தொழில் அல்லது வியாபார ரீதியாக அரசு உதவிகள் கிடைக்க இடம் உண்டு. தொழில் ரீதியாக இருந்து வந்த நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் கூட நல்ல படியாக ஒரு முடிவுக்கு வரும். நல்ல விதத்தில் பொருட்களை சந்தைப்படுத்தி நீங்கள் லாபங்களைப் பெறுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் கூட திரும்பி வருவார்கள். பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் மட்டும் நன்கு ஆலோசித்து திட்டமிட்டுச் செய்யுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை மதிப்பார். பெண்களைப் பொறுத்தவரையில், புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை அல்லது உத்யோக ரீதியாக நல்ல திருப்பு முனைகள் எல்லாம் ஏற்படும். நன்மைகள் நடைபெறும் நல்ல நாள்.

ரிஷபம்

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் சந்தர்ப்பம் ஏற்படும். அலுவலகப் பணிகளை முடிப்பதில் சில தடைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

மிதுனம்

மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். ஆஞ்சநேயரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்மைகளை அதிகரிக்கும்.

கடகம்

இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.

சிம்மம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று மகாலட்சுமி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

கன்னி

இன்று சிலருக்கு பிள்ளைகள் வழியில் சில மனக் கவலைகள் வந்து போக இடம் உண்டு. பல நேர்முக – மறைமுக எதிர்ப்புகளைக் கடந்து தான் முன்னேற வேண்டி இருக்கும். மற்றபடி, பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரித்தாலும் கூட அதனை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். முடிந்த வரையில் பிறர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் சின்னச், சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலுமே கூட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட இடம் இல்லை. விநாயக வழிபாடு சங்கடம் போக்கும்.

துலாம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

விருச்சிகம்

சோர்வு, களைப்பு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு

சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் சிலருக்கு மிகுந்த அலைச்சலுக்குப் பிறகே பலிதமாகும் நாள்.

மகரம்

ஒரு சிலருக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் சின்னச், சின்ன விவாதங்கள் வந்து போகலாம். தாயாரின் ஆசைகளை சிலர் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். உத்யோகத்தில் வேலை பளு தவிர்க்க முடியாது. வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.

கும்பம்

இன்று சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலைத் தரலாம். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் சின்னச், சின்ன முரண்பாடுகள் ஏற்படலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் போராடியே ஓரளவு லாபத்தைப் பெறும் படியாக இருக்கும். உறவினர்களால் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடை பெறக்கூடும் என்பதால், கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகம் செல்பவர்களுக்கு பணிகளில் சற்று உற்சாகம் குறையக்கூடும். அதன் காரணமாக அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். புதிய முதலீடுகள் விஷயத்தில் ஒருமுறைக்குப் பலமுறை நன்றாக யோசித்துச் செயல்படவும்.

மீனம்

மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும். விநாயகரை வழிபடுவதன் மூலம் தடைகளைத் தகர்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ six = thirteen

Back to top button
error: