Author: newsdesk

அசாமில் கொட்டி தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 15 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 1 லட்சத்து 321 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 57 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். லக்கிம்பூர் மற்றும் நாகோன் மாவட்டங்களில் பல சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. இடைவிடாத மழையால் திமா ஹசாவ் மாவட்டத்தில் 12 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் பாதை, பாலங்கள் மற்றும் சாலை தகவல் தொடர்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், துணை ராணுவப் படைகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மீட்பு படையினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

நீட் தேர்வு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற 20ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மீண்டும் 20ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதுவரை 20 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Read More

வட தமிழக கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.300க்கு விற்பனை செய்த 28 கிலோ எடை கொண்ட ஒரு டிப்பர் தற்போது 5 மடங்கு விலை உயர்ந்து, ரூ.1600க்கு விற்பனையாகிறது. மேலும் பீன்ஸ், அவரைக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

Read More

அருணாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் பஞ்சாபி தாபா அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு ஒன்று சிக்கியது, இதில் வீட்டிலிருந்த இருவர் பலியாகினர். தொடர் மழையால் உடலை மீட்க முடியாமல், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Read More

இலங்கையில் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றார். ஆனால் அவர் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறபோவதில்லை என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சஜித்துக்கு விக்ரமசிங்கே கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘சம்பிரதாய அரசியல் இருந்து விலகி கட்சி பேதமின்றி தாய் நாட்டிற்காக ஒன்றிணைவோம். அரசியல், பொருளாதார நிலைமையை முன்னேற்றும் முயற்சியில் ஈடுபட வாருங்கள்’ என கூறியுள்ளார்.

Read More

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இது எனது கடைசி ஐபிஎல் ஆகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 13 வருடங்களாக 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாடியதில் எனக்கு ஒரு அற்புதமான நேரம் கிடைத்தது. அற்புதமான பயணத்திற்காக MI மற்றும் Csk க்கு மனப்பூர்வமாக நன்றி சொல்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார்.

Read More

தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 5 தினங்களுக்கு தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று (மே 14ம் தேதி) கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

Read More

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று(13ம் தேதி) ரூ.500க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று(14ம் தேதி) ரூ.1,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும், நாளை 15ம் தேதி முகூர்த்த நாள் என்பதாலும் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Read More

புற்றுநோய் முதல் இதய நோய் வரை அனைத்திற்கும் முள் சீத்தா அருமருந்தாகுகின்றது. முள் சீத்தா மனித உடலின் அனைத்து செயல்பாட்டிற்கும் நன்கு உதவுகிறது. இவற்றில் அதிகமான ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது. புரதம், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், கால்சியம், வைட்டமின் எ, பொட்டாசியம், இரும்பு சத்து, வைட்டமின் பி போன்ற மூல பொருட்கள் உடலை சீராக வைக்க பயன்படுகிறது. முள் சீத்தா பழத்தை காட்டிலும் அவற்றின் இலைகள் அதிக மருத்துவ தன்மை உடையது. அதை போலவே தான் முள் சீத்தாவில் டீ போட்டு குடிப்பதனால் பல நோய்களை நம்மை விட்டு பறந்து செல்கின்றது. தற்போது முள்சீத்தா டீயின் மகத்துவங்களை பற்றி பார்ப்போம். தேவையானவை முள் சீத்தா – 6 தேன் – 1 டீஸ்பூன் செய்முறை முதலில் 6 காய்ந்து அல்லது ஃபிரஷ் முள் சீத்தா இலைகளை எடுத்து கொண்டு, அதனை 4 கப் நீரில் மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். மேலும் தேவைக்கேற்ப…

Read More