சினிமா

தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படம் உருவாகியுள்ளது, விரைவில் ரஜினி இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 171 படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்கின்றனர்.

தற்போது வெளியான தலைவர் 171 டைட்டில் டீசரில் இப்படத்தின் தலைப்பு கூலி என படக்குழு அறிவித்துள்ளது. எப்போதுமே கஞ்சா கடத்தலை பின்னணியாக வைத்து படம் இயக்கும் லோகேஷ், இந்த முறை தங்கக் கடத்தலில் இறங்கியுள்ளது டீசரில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

விக்ரம், லியோ படங்களின் டைட்டில் டீசர் ஸ்டைலிலேயே தலைவர் 171 டைட்டில் டீசரையும் உருவாக்கியுள்ளார் லோகேஷ். அதேபோல் அதே டார்க் ஷேட் கலர் டோனில் கூலி டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + = twenty

Back to top button
error: