சினிமா

தனுஷ் நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட்!

கடந்த சில வருடங்களாக நடிகர் தனுஷின் படங்கள் எதுவும் வெற்றி பெறாத நிலையில், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இது தவிர பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் சாதனை படைத்தது. இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இன்று படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = seven

Back to top button
error: