சினிமா

ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் வேட்டையன். இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கான ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் குழுமம் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது வேட்டையன் திரைப்படம் படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 6 =

Back to top button
error: