சினிமா

‘புஷ்பா 2’ படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா தி ரைஸ் திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா தி ரூல் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirty nine + = forty six

Back to top button
error: