Skip to content
Daily Tamilnadu
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
ADVERTISEMENT

மாவட்டம்

நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை, வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த விழா செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறும், இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பங்கேற்பார்கள். இந்த நிலையில், கொடியேற்ற தினத்தை முன்னிட்டு, வரும் 29ம் தேதி, நாகை மற்றும் கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் பி. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி பயணிகளின் வசதிக்காக 1,734 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து 13, 14, 15 ஆகிய தேதிகளில் 1,320 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 14, 15 ஆகிய தேதிகளில் 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 14, 15 ஆகிய தேதிகளில் 24 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT

சென்னையில் இன்று முதல் மின்சார ஏசி பேருந்து சேவை தொடக்கம்!

தமிழ்நாட்டில் முதன்முறையாக தாழ்தள மின்சார பேருந்து சேவையை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக இன்று (ஆக.11) முதல் சென்னையில் மின்சார ஏசி பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாக்கத்தில் இருந்து 55 மின்சார ஏசி பேருந்துகள் முதல் கட்டமாக சேவையை தொடங்குகிறது. அதேபோல் 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் என மொத்தம் 135 பேருந்துகள் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

சென்னையில் நாளை (ஆக.06) மின் தடை ஏற்படும் பகுதிகள்!

தமிழகத்தில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில், நாளை (ஆக.06) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் நாளை (ஆக.06) ஒரு சில இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மின் தடை ஏற்படும் பகுதிகள்: பல்லாவரம் டிவிசன்: காமாட்சி நகர், தேவராஜ் நகர், பசும்பொன் நகர், பாலாஜி […]

தமிழகத்தில் இன்று (ஆக.5) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (ஆக.05) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில், கோவை, நீலகிரிக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் […]
ADVERTISEMENT

சென்னையில் நாளை (25-07-2025) மின் தடை ஏற்படும் பகுதிகள்!

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின் தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (25.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின் தடை ஏற்படும் பகுதிகள்:- சோழிங்கநல்லூர் பிரிவு: சீத்தலபாக்கம், வரதராஜப் பெருமாள் கோவில் தெரு, ஏடிபி […]

முதல்வர் ஸ்டாலின் பயணம் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று (ஜூலை 22) மற்றும் நாளை (ஜூலை 23) திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். ஆனால், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால், மருத்துவர்கள் அவருக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, முதல்வர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று துவக்கம்!

சென்னையில் உள்ள மாதவரம் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) நடைபெறுகிறது. இந்த சிறப்பு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் கலந்து கொள்கின்றனர். நாளை (ஜூலை 23) 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள், தங்களது கல்லூரி விருப்பங்களை ஜூலை 24 ஆம் தேதி வரை […]
ADVERTISEMENT

ஸ்டாலின் படைத்த ஒரே சாதனை: ஈபிஎஸ்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி), அரியலூரில் நேற்று (ஜூலை 15) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில், அவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஈபிஎஸ் கூறியதாவது: “நாட்டு மக்களை ஏமாற்றுவதில் முதலிடத்தில் உள்ளவர் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலின் தனது 4 ஆண்டுகால ஆட்சியில் ஒரேயொரு சாதனை தான் படைத்துள்ளார். அது, தன் மகனை எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் ஆக்கியதுதான்.” […]

இந்த 9 மாவட்டங்களில் இரவு 10 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 15) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement