கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று துவக்கம்!
சென்னையில் உள்ள மாதவரம் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) நடைபெறுகிறது. இந்த சிறப்பு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் கலந்து கொள்கின்றனர்.
நாளை (ஜூலை 23) 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள், தங்களது கல்லூரி விருப்பங்களை ஜூலை 24 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.