இந்த 9 மாவட்டங்களில் இரவு 10 வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 15) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.