ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (03-05-2024)

இன்றைய நாள் (03-05-2024) :

குரோதி-சித்திரை 20-வெள்ளி-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 9:30 – 10:30

மாலை 4:30 – 5:30

கௌரி நல்ல நேரம்

காலை 12:30 – 1:30

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

இன்று இரவு 09.26 வரை சதயம் பின்பு பூரட்டாதி

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

திருவாதிரை, புனர்பூசம்

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

மிதுனம் / கடகம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக செயல்படுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

செயல்களில் திட்டமிடுதல் மிகவும் அவசியம். அதேபோல் கடன்கள் விஷயத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு தந்தைவழி உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று நீங்கள் அம்பிகையை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிதுனம்

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது உங்களை உற்சாகப்படுத்தும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் பைரவரை வழிபாடு செய்வது நன்று.

கடகம்

சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். காதில் வாங்காதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

கன்னி

இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்

எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். ‌ வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு

கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

மகரம்

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்

அடுக்கடுக்கான வேலைகளால் அவதி கொள்ளாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கவனம் தேவைப்படும் நாள்.

மீனம்

இதுவரை இருந்த கோபம், டென்ஷன் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்றப் பொலிவு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. நன்மை நடக்கும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ seventy one = seventy seven

Back to top button
error: