ஜோதிடம்

மே 01 2024: இன்றைய ராசிபலன்

இன்றைய நாள் (01-05-2024) :
குரோதி-சித்திரை 18-புதன்-தேய்பிறை

நல்ல நேரம்

காலை 9:30 – 10:30

மாலை 4:30 – 5:30

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

இன்று அதிகாலை 01.42 வரை உத்திராடம் பின்பு திருவோணம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

ரோகிணி, மிருகசீருஷம்

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

ரிஷபம் / மிதுனம்

இன்றைய ராசிபலன் 

மேஷம்

இன்று அலைச்சல் அதிகம் காணப்படும். சிலர் உத்யோக ரீதியாகப் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். அப்படியாகப் பிரயாணங்களை மேற்கொள்ளும் சமயத்தில் அதனை நன்கு திட்டமிட்டுச் செய்தால் அலைச்சலைத் தவிர்க்கலாம். உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகம் இருந்தாலும், மேலதிகாரி உங்கள் உழைப்பை அங்கீகரிப்பார். சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல் போக்கு கூட ஒரு முடிவுக்கு வரும்.தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டிகள் காணப்பட்டாலும் கூட, இறுதியில் எதிர்பார்க்கும் லாபத்தைப் போராடிப் பெற்று விடுவீர்கள். மற்றபடி, வியாபாரம் வழக்கம் போலத்தான் இருக்கும். எனினும் தொழில் கூட்டாளிகளை அதிகம் சிலர் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். முடிந்த வரையில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். புதிய கிளைகளைத் துவங்கும் சமயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளவும். அரசு விஷயங்களில் சிலருக்குச் சின்னச், சின்ன கெடுபிடிகள் வந்து போகலாம்.

ரிஷபம்

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டிய நாள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டியது அவசியம். முதலீடுகளில் கவனம் தேவை. பொறுமையுடன் காரியங்களை அணுகவும்.

மிதுனம்

இன்று வியாபாரத்தில் புதிய முயற்சிகளையும் முதலீடுகளையும் நன்கு யோசித்துச் செய்யவும். சக வியாபாரிகளால் மறைமுகப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும், அதனை சமாளித்து முன்னேறுவீர்கள். சிலருக்கு வீடு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். வாகனத்தில் பழுது ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம். மற்றபடி, வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் சென்று வரவும்.

கடகம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் உபத்திரவத்தில் சிக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

கன்னி

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. கால பைரவரை வழிபடுவதன் மூலம் மன நிம்மதி பெறலாம்.

துலாம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

இன்று உத்யோகம் வழக்கம் போலவே இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் மட்டும் அல்ல, சில சமயங்களில் எதிர்பாராத இடத்தில் இருந்து கூட உங்களுக்கு உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுப காரியங்கள் அலைச்சலை தந்தாலுமே இறுதியில் எல்லாமே நல்ல படியாக நடந்தேறும். தொழில், வியாபாரத்தில் சிறு, சிறு நெருக்கடிகள் வந்தாலுமே கூட அதனை சமாளித்து விடுவீர்கள். தொழில் ரீதியாக வளர்ச்சி உண்டு. எனினும், தொழில் அல்லது வியாபாரத்தில் வேலை ஆட்களால் சிறு, சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். இறுதியில் சோதனைகளைக் கடந்து சாதிப்பீர்கள்.

தனுசு

இன்று சிலருக்கு தொழில் அல்லது வியாபார ரீதியாக அரசு உதவிகள் கிடைக்க இடம் உண்டு. தொழில் ரீதியாக இருந்து வந்த நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் கூட நல்ல படியாக ஒரு முடிவுக்கு வரும். நல்ல விதத்தில் பொருட்களை சந்தைப்படுத்தி நீங்கள் லாபங்களைப் பெறுவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் கூட திரும்பி வருவார்கள். பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் மட்டும் நன்கு ஆலோசித்து திட்டமிட்டுச் செய்யுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை மதிப்பார். பெண்களைப் பொறுத்தவரையில், புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை அல்லது உத்யோக ரீதியாக நல்ல திருப்பு முனைகள் எல்லாம் ஏற்படும். நன்மைகள் நடைபெறும் நல்ல நாள்.

மகரம்

இன்றைய தினம், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் நிதானமாகச் சென்று வாருங்கள். பொருளாதாரம் அதிக ஏற்ற இறக்கமாக இருக்கும். திடீர் செலவுகள் உங்களை திக்கு முக்காட வைக்கும். அதனால் முடிந்த வரையில் சிக்கனத்தை கடைபிடிக்கப் பாருங்கள். எதையும் பட்ஜெட் போட்டுச் செய்யுங்கள். சிலருக்கு வீடு, வாகனம் சம்மந்தமாகப் பராமரிப்புச் செலவுகள் கூட அதிகரித்துக் காணப்படலாம். குடும்பத்தில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் சில அலைச்சலைத் தந்தாலும் கூட, இறுதியில் எல்லாம் நல்ல படியாகவே நடந்தேறும். கணவன் – மனைவி இடையே சின்னச், சின்ன கருத்து வேறுபாடுகள் வந்தாலும் கூட அதனால் ஒற்றுமை குறைய வாய்ப்பு இல்லை. பங்குச் சந்தை, யூக வணிகம் போன்றவை நன்மையைச் செய்யாது. அதனால் மேற்கண்டவற்றில் முதலீடுகளை நன்கு யோசித்துச் செய்யவும். அதிலும் பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் மிகவும் நிதானமாக இருந்து கொள்ளவும். உத்யோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில் அல்லது வியாபாரத்தில் போராடியே லாபம் ஈட்டும் படி இருக்கும்.

கும்பம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மீனம்

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களின் சேர்க்கை உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventy two + = seventy nine

Back to top button
error: