ஆன்மீகம்ஜோதிடம்

உகாதி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா..?

உகாதி பண்டிகை இந்தியாவின் தென் பகுதிகளில் குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இது இந்து நாட்காட்டியின்படி புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

இந்நாளில் புதிய ஆடைகளை அணிந்து, வீட்டை அலங்கரித்து, சிறப்பு உணவுகளை சமைத்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டாடப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், உகாதி பண்டிகை ஏப்ரல் 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

உகாதி பொருள்:

உகாதி என்பது யுகாதி என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது. “யுக்” என்றால் வயது என்றும் “ஆதி” என்றால் ஆரம்பம் என்று பொருளை தரும். உகாதி என்பது ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதிகளில் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.

உகாதி பண்டிகையின் சிறப்பு 

சைத்ர மாதத்தின் முதல் நாளில் பிரம்மா பிரபஞ்சத்தைப் படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நாள் புதிய முயற்சிகளைத் தொடங்க நல்ல நாளாகக் கருதப்படுகிறது. சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிக்கிறது என்பதால், இந்த நாளின் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கிறது.

மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது.

உகாதி கொண்டாட்டம்:

உகாதி பண்டிகையின் போது அனைவரும் விடியற்காலையிலே நீராடி விடுவார்கள். அதன் பிறகு வீட்டிற்கு முன்பு மாவிலை தோரணம் கட்டி வண்ண கோலமிட்டு அலங்கரிப்பார்கள்.

உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 5 =

Back to top button
error: