ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (16-05-2024)

இன்றைய நாள் (16-05-2024) :

குரோதி-வைகாசி 3-வியாழன்-வளர்பிறை

நல்ல நேரம்

காலை 10:30 – 11:30

கௌரி நல்ல நேரம்

காலை 12:30 – 1:30

மாலை 6:30 – 7:30

நட்சத்திரம்

இன்று இரவு 08.33 வரை மகம் பின்பு பூரம்

சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி)

மூலம், பூராடம்

சந்திராஷ்டமம் (ராசிப்படி)

தனுசு

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும் கூட பொருளாதாரம் உங்களுக்குச் சாதகமாகத் தான் இருக்கும். வேலையாட்களை மட்டும் நீங்கள் அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். அரசு உதவிகள் சிலருக்குத் தாமதம் ஆகலாம். வங்கிக் கடனை சிலர் போராடி அடைப்பீர்கள். அரசியல் வாதிகள் பேச்சில் அதிக நிதானத்தை கடை பிடிக்க வேண்டிய தருணம் இது. உடன் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது இப்போதைக்கு நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற – இறக்கமான நிலை காணப்படலாம். சில தடைகளை தாண்டியே முன்னேற வேண்டிய நாள். எனினும் எதிர் நீச்சல் போட்டு இறுதியில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு சகல விதங்களிலும் ஏற்றம் மிகுந்த பலன்கள் எல்லாம் ஏற்படும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் குறையும். பொருளாதாரம் நல்ல விதத்தில் மேம்படும். பயணங்கள் வெற்றியைத் தரும். பெரும்பாலும் உங்கள் முயற்சி வீண் போகாது. எண்ணியது எண்ணியபடி நடந்தேறும். நல்ல திருப்பங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏற்படும். புதிய வீடு, மனை வாங்கக் கூடிய யோகம் எல்லாம் கூட கிடைக்கப்பெறும். சமூகத்தில் சில பெரிய மனிதர்களின் அறிமுகம் எல்லாம் கிடைக்கப்பெறும். நன்மையான நாள்.

மிதுனம்

தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

கடகம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

இன்று சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அல்லது துறை மாற்றங்கள் அலைச்சலைத் தரலாம். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை நீங்களே நேரடியாகச் செய்யுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லப்பாருங்கள். வேலை பளு அதிகம் இருக்கிறதே என்று வேலையை விட்டு விடாதீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கூட இப்போதைக்கு கிடைக்கும் வேலையை செய்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகளுக்கு இடையே லாபம் பார்க்க வேண்டிய நிலை காணப்படும். அதே சமயத்தில், சிலருக்கு கேட்ட இடத்தில் இருந்து உதவிகளும் கிடைக்கப்பெறும். மற்றபடி செலவுகள் அதிகம் காணப்பட்டாலும் இறுதியில் சமாளித்து விடுவீர்கள்.

கன்னி

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதியும் மனதில் சோர்வும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். துர்கையை வழிபட, அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்பட முடியும்.

துலாம்

புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினருடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பூர்வீக சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு லேசாக தலை வலிக்கும். கண் சம்மந்தமான பிரச்சனைகளில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

கணவன் – மனைவி இடையே சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து போனாலும் கூட அதனால் ஒற்றுமை குறைய வாய்ப்பில்லை. புதிய முயற்சிகள் அலைச்சல் தந்தாலும் கூட இறுதியில் சாதகமாகத் தான் முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட அதனை சமாளித்து விடுவீர்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

66 − fifty seven =

Back to top button
error: