ஆன்மீகம்ஜோதிடம்

ஏன் நெற்றியில் சந்தனம் பூசுகிறோம்?

சந்தனம் என்பது ஒரு இயற்கையான மருத்துவப்பொருள். சந்தனத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் மினரல்ஸ்கள் உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். மேலும் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, சுருக்கங்களை ஏற்படுத்தும் இயக்க உறுப்புகளின் உருவாக்கத்தை தடுக்கும். ஆண்கள் நெற்றியில் மட்டும் தொடர்ந்து சந்தனம் பூசி வந்தால்… அது லட்சுமி கடாக்ஷத்தை தரும்.

சந்தனத்தை புருவ மத்தியில் வைக்கும் போது அப்பகுதியில் இயங்கி வரும், உடலை கட்டுப்படுத்தக்கூடிய பிட்யூட்டரி சுரப்பி குளிர்ச்சி அடைகிறது. அதன் மூலம் உடலின் தலைமை செயலகமான மூளையின் பின்பகுதியில் எண்ணங்களின் பதிவிடமாக உள்ள ‘ஹிப்போகேம்பஸ்’ என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை அனுப்புகிறது.

இரு புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிந்தனை நரம்புகள் ஒன்று கூடும் இடம் என்ற நிலையில் அங்கு மெதுவாக ஆட்காட்டி விரலால் தொட்டால், மனதில் உண்டாகும் ஒரு வித உணர்வு, தியான நிலைக்கு அடிப்படையாக அமைகிறது. மன ஒருமை மற்றும் சிந்தனையில் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில், குளிர்ந்த சந்தனத்தை அங்கே அணிவதன் மூலம் குறிப்பிட்ட கால அளவு வரை மன ஒருமை ஏற்படுவதும் அறியப்பட்டுள்ளது.

பெண்கள் சந்தனத்தை கழுத்தில் இடலாம். ஆண்கள் சந்தனத்தை கழுத்தில் இடுதல் கூடாது. இது சாஸ்திரம் சொல்லும் விஷயம். இதனை மீறினால் தோஷத்தை விளைவிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − = nineteen

Back to top button
error: