Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 13 அக்டோபர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! • டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! • தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! • டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! • யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! • இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

செய்திகள்

பிப்ரவரி 4ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவை எதிர்கொள்ளவும், தங்கள் செல்வாக்கை நிரூபிக்கவும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தீவிரமான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக பிப்ரவரி 4-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான […]

பட்ஜெட் பதற்றம்: பங்கு சந்தைகள் நஷ்டத்தில் முடிந்தன!

2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நெருங்கி வருவதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். இன்று வெள்ளிக்கிழமை, இந்திய பங்குச் சந்தைகள் நஷ்டத்தில் முடிவடைந்தன. குறிப்பாக உலோகப் பங்குகளில் கடுமையான விற்பனை அழுத்தம் குறியீடுகளைப் பாதித்தது. வர்த்தகத்தின் முடிவில், சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிந்து 82,269 இல் நிலைபெற்றது. நிஃப்டி 98 புள்ளிகள் சரிந்து 25,320 இல் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் பங்கு சந்தைகள் கலவையான முடிவுகளைக் கண்டன. நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.17 சதவீதம் சரிந்தது, […]

உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் இதுதான்!

பாகிஸ்தானின் லாகூர், உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக மாறியுள்ளது. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காற்று தர கண்காணிப்பு நிறுவனமான ‘IQAir’ வெளியிட்ட பட்டியலில் லாகூர் முதலிடத்தில் உள்ளது. புதன்கிழமை புள்ளிவிவரங்களின்படி, லாகூரின் காற்று தர குறியீடு (AQI) 452 ஆக பதிவாகியுள்ளது. பாகிஸ்தானின் மற்றொரு முக்கிய நகரமான கராச்சி, 179 AQI உடன் அதே பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானில் காற்று மாசுபாடு ஒரு கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடியாக மாறியுள்ளது. லாகூர் […]

இளம் மில்லியனர்கள் பட்டியலில் சீனா, பிரிட்டனை முந்தியது இந்தியா!

இளம் தொழில்முனைவோருக்கான உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அவென்டஸ் வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் ஹுருன் இந்தியா நிறுவனம் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, 40 வயதுக்குட்பட்ட ‘சென்டிமில்லியனர்கள்’ ($100 மில்லியனுக்கும் அதிகமான செல்வம்) பட்டியலில் சீனா மற்றும் இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 505 இளம் தொழில்முனைவோரில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 201 பேர் என்ற சாதனை எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கின்றனர்; இதில் குறிப்பாக […]

2026ல் உலகம் சிக்கலில் சிக்குமா? பாபா வாங்காவின் பயங்கரமான கணிப்புகள்.. போரும் பொருளாதார நெருக்கடியும் தவிர்க்க முடியாதவை!

உலகப் புகழ்பெற்ற பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வாங்காவைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. அவர் இறந்து பல தசாப்தங்கள் கடந்துவிட்டாலும், அவரது தீர்க்கதரிசனங்கள் தொடர்ந்து உண்மையாகி வருகின்றன, இது அனைவரிடமும் ஆர்வத்தையும் பயத்தையும் உருவாக்குகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான அவரது சமீபத்திய கணிப்புகள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. பொருளாதாரம் சிக்கலில் உள்ளதா? பாபா வாங்காவின் கணிப்புகளின்படி, 2026 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கப் போகிறது. வங்கி சரிவு: […]

தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய தலைவராக ராகேஷ் அகர்வால் நியமனம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) புதிய தலைவராக ராகேஷ் அகர்வாலை மத்திய அரசு நியமித்துள்ளது. மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ், 1994 ஆம் ஆண்டு பேட்ச் சேர்ந்தவர். இதுவரை NIA-வில் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக பணியாற்றியுள்ள இவர், பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் அனுபவம் பெற்றவர். மத்திய அமைச்சரவையின் (ACC) நியமனக் குழுவின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டது. ராகேஷ் அகர்வால் ஏற்கனவே சிறிது காலம் இடைக்காலத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இப்போது, முழு […]

மத்திய கிழக்கில் உச்சக்கட்டப் பதற்றம்: வான்வெளியை அதிரடியாக மூடியது ஈரான் – சர்வதேச விமானங்கள் ரத்து!

ஈரானில் வெடித்துள்ள உள்நாட்டுக் கலவரம், இணையச் சேவை முடக்கம் மற்றும் அமெரிக்காவுடனான போர் பதற்றம் போன்ற காரணங்களால், நாட்டின் வான்வெளியை அனைத்து வகையான விமானப் போக்குவரத்துகளுக்கும் மூடுவதாக ஈரானிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (NOTAM) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் தடையால் சிவில், ராணுவம் மற்றும் சரக்கு விமானங்கள் என அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா, எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட முன்னணி சர்வதேச நிறுவனங்கள் ஈரானிய வான்வெளியைத் தவிர்த்துத் தங்களது விமான […]

ஜியோ ஐபிஓ விரைவில் வருகிறது! அம்பானி ரூ.40,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளார்!

இந்திய பங்குச் சந்தை அதன் வரலாற்றில் மிகப்பெரிய ஐபிஓ (IPO) வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இந்த ஆண்டு (2026) ஒரு ஐபிஓவிற்கு தயாராகி வருகிறது. சந்தையில் இருந்து சுமார் ரூ.40,000 கோடி திரட்ட இலக்கு வைத்துள்ளது. ஜியோவின் மதிப்பு சாதனை அளவில் உயர்ந்துள்ளது! ரிலையன்ஸ் ஜியோவின் தற்போதைய மதிப்பு சுமார் $180 பில்லியன் (சுமார் ரூ.16.20 லட்சம் கோடி) என முதலீட்டு வங்கியான ஜெஃப்பெரிஸ் மதிப்பிட்டுள்ளது. நிறுவனம் தனது […]

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று தொடக்கம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 2.33 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (ஜனவரி 8) சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டு பரிசுத் தொகுப்புடன் கூடுதலாக தலா 3,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கூட்ட நெரிசலைத் […]

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுவாக உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த வளிமண்டல மாற்றத்தால் இன்று (ஜனவரி 8) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 … 9 10 11 12 13 … 37