விளையாட்டு

2வது ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் ஆரம்பம்!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 2-வது ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.

ஐஎபிஎல் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், சென்னை – பெங்களூர் அணிகள் மோதும் முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து, வரும் 26ம் தேதி சேப்பாக்கத்தில் சென்னை – குஜராத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்குகிறது.

முதல் போட்டியில் அதிகபட்சமாக 7 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த டிக்கெட் கட்டணம், 2வது போட்டியில் 6 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2வது போட்டிக்கான டிக்கெட் விலை ஆயிரத்து 700 ரூபாய் தொடங்கி 6 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

81 − seventy nine =

Back to top button
error: