விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடைபெற உள்ளது. 10 அணிகள் கொண்ட 17வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதன்படி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பஞ்சாப் அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirty five − = 30

Back to top button
error: