ஆரோக்கியம்

ஆண்கள் தங்கள் அழகை வெளிக்­காட்ட செய்ய வேண்டியது!

ஆண்கள் தங்கள் அழகை வெளிக்­காட்ட, உடல் கட்­ட­மைப்பை மெரு­கேற்ற எண்­ணு­வார்கள். அத­னையே பெண்­களும் ஆண்­க­ளிடம் விரும்­பு­கி­றார்கள். அதனால் ஆண்கள் உடம்பை ஏற்ற மணிக்­க­ணக்கில் ஜிம்மில் நேரத்தை செல­வி­டு­கி­றார்கள். நல்ல உடல்­கட்டு வேண்டும் என்று எண்­ணு­ப­வர்கள் எப்­போதும் தீவிர உடற்­ப­யிற்­சியில் ஈடு­பட்டால் மட்டும் போதாது. உடல் கட்­ட­மைப்பில் உண்ணும் உணவும் முக்­கிய இடம் பிடிக்­கி­றது.

ஆகவே போதிய உடற்­ப­யிற்­சி­யுடன், சரி­யான மற்றும் ஆரோக்­கி­ய­மான உணவை உட்­கொள்­வது மிகவும் அவ­சியம். உடற்­ப­யிற்­சிக்கு ஈடாக ஆரோக்­கி­ய­மான உணவும் உடல் கட்­ட­மைப்பை மெரு­கேற்ற உத­வு­கி­றது.

ஓட்ஸ் கஞ்சி

ஓட்ஸ் கஞ்­சியில் அதிக நார்ச்­சத்து உள்­ளதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்­கரை நோயை குறைக்கும். மற்றும் கொழுப்பு தேங்­கு­தலை குறைக்­கி­றது.

பருப்பு வகைகள்

சரி­யான உடல் கட்­ட­மைப்பு வேண்­டு­மானால், பருப்பு வகை­களை கண்­டிப்­பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் வழ­மை­யான புர­தச்­சத்து, அதி­முக்­கிய விற்றமின்கள் மற்றும் கனி­மச்­சத்­துக்கள் உள்­ளதால், தசை­களின் ஆரோக்­கியம் நன்­றாக இருக்கும்.

வேர்க்­க­டலை வெண்ணெய்

புர­தச்­சத்து, விற்­ற­மின்கள், மெக்­னீ­சியம் மற்றும் நார்ச்­சத்­து­போன்­றவை நிறைந்­தது தான் நிலக்­க­டலை வெண்ணெய். இதை அள­வாக எடுத்துக் கொண்டால், இதய தசை­களை மேம்­ப­டுத்தி, கொழுப்பை குறைக்க உதவும்.

முட்டை

உடல் கட்­ட­மைப்பை ஏற்ற நினைப்­ப­வர்கள் கண்­டிப்­பாக முட்­டை­களை சாப்­பிட வேண்டும். இதில் விற்­றமின் ஏ, டி, ஈ, கோலைன், நல்ல கொழுப்பு மற்றும் புரதச் சத்­துக்கள் அதிக அளவில் உள்­ளன.

நண்டு

நண்டு, எலும்பின் ஆரோக்­கி­யத்­திற்கு பெரிதும் உறு­து­ணை­யாக இருக்கும். இதில் ஜிங்க் மற்றும் தேவை­யான ஆக்­ஸி­ஜ­னேற்றத் தடுப்­பான்கள் நிறைந்­துள்­ளதால், இது தசைக்கு பலத்­தையும், உடலில் எதிர்ப்பு சக்­தி­யையும் அதி­க­ரிக்கும்.

பாலா­டைக்­கட்டி

உடல் கட்­ட­மைப்பை ஏற்ற விரும்­பு­ப­வர்­க­ளுக்கு பாலா­டைக்­கட்டி ஒரு வரப்­பி­ர­சா­தமே. இதில் பால் மற்றும் மோரின் புரதம் அதிக அளவில் உள்­ளது.

சால்மன் மீன்

சால்மன் மீனில் அதிக அளவு மோனோ அன்­சாச்­சு­ரேடட் கொழுப்பு அமி­லங்கள் அடங்­கி­யுள்­ளது. மேலும் இதில் அலர்ச்சியை தடுக்கும் குணங்கள் அடங்­கி­யி­ருப்­பதால், உடற்­ப­யிற்சி செய்த பின் சாப்­பி­டு­வ­தற்கு சிறந்த உண­வாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 − thirty =

Back to top button
error: