விளையாட்டு

ஐபிஎல் 2024: மார்ச் 22 முதல் போட்டிகள் ஆரம்பம் – முழு அட்டவணை விவரம் இங்கே!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் 2024 டுவென்டி 20 கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் மார்ச் 22-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது. இந்தப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.

நாட்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 10 நகரங்களில் மொத்தம் 21 போட்டிகள் நடைபெறவுள்ளன.

தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தல் தேதியை வெளியிட்ட பிறகு மீதமுள்ள போட்டிகளின் அட்டவணை வெளியிடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன, தலா ஐந்து அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றில் அனைத்து அணிகளும் தலா 14 போட்டிகளில் விளையாடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifty five + = sixty two

Back to top button
error: