சினிமா

“லால் சலாம்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் ரிலீஸ்

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படைப்பில் தற்போது உருவாகி வரும் லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லால் சலாம் படத்தின் “தேர் திருவிழா” என்ற தலைப்பு கொண்ட முதல் பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

forty five + = fifty two

Back to top button
error: