சினிமா

யோகி பாபு நடிக்கும் ‘போட்’ படத்தின் டீசர் வெளியானது!

தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. இப்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்த மண்டேலா, கூர்கா, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் போட் (Boat), இதில் யோகி பாபுவுடன் கௌரி ஜி கிஷன், மது மகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. யோகி பாபு நடித்துள்ள போட் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க கடலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = seven

Back to top button
error: