தமிழ்நாடுமாவட்டம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை முதல் தொடக்கம்!!

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

பொதுத் தேர்வை பொறுத்த வரையில் தமிழகம், புதுச்சேரியில் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாளை தமிழ் பாடத்தேர்வுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதற்கு அடுத்த தேர்வு வருகிற 5-ந் தேதி என ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளிவிட்டு வருகிற 22-ந் தேதி வரை அவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கிடையில், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு வருகிற 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரையிலும், அதனைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifty nine − = fifty eight

Back to top button
error: