ஆரோக்கியம்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம்..?

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக இனிப்பு உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெறும் காய்கறிகள் என்று அலட்சியம் வேண்டாம், அதிலும் அதிக இனிப்பு (சர்க்கரையின் அளவு) கொண்ட காய்கறிகளும் உண்டு. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

சுரைக்காய்:

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்படுவதோடு உடல் எடையும் குறையும். இதை தவிர்க்க சுரைக்காயின் சதை பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சாம்பாரிலிட்டு சாப்பிட்டு வர தாகம் அடங்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.. இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.

வெண்டைக்காய்:

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பாகற்காய்:

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெந்தயக் கீரை:

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

பூசணிக்காய்:

அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.

காலிஃப்ளவர்:

மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

பிரெஞ்சு பீன்ஸ்:

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 + = twenty seven

Back to top button
error: