சினிமா

விஜயின்’ கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ்..!

இன்றைய சினிமாவில் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் 3, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன மற்றும் திருமலை படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திருமலை படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜயின் மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படம் மறுஒளிபரப்புக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் விஜய், நடிகை திரிஷா ஆகியோரின் எதார்த்த நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 17ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 14 =

Back to top button
error: