சினிமா

மார்ச் 29ம் தேதி ஓடிடியில் வெளியாகும் ‘ப்ரேமலு’!!

தென்னிந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அதிகமான ஆக்ஷன், ஃபேண்டஸி எதுவும் இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒத்திருக்கும் மலையாள சினிமாக் கதைகள் மொழிகளைத் தாண்டியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் தான் “ப்ரேமலு” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி 9ம் தேதி வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘ப்ரேமலு’ திரைப்படம் OTT தளத்தில் வெளியிட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது, ‘ப்ரேமலு’ திரைப்படம் வரும் (மார்ச் 29) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படம் இதுவரை உலக அளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− seven = two

Back to top button
error: