சினிமா

‘GOAT’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் நிறுவனம்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். கடத்த வருடம் இவர் நடித்த லியோ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமே பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படம் என்றால் அது GOAT தான். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அது போக இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்த வருகின்றனர்.

தற்போது படத்தின் ஷூட்டிங்-காக பட குழுவினர் ரஷ்யாவுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் GOAT படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது வெங்கட் பிரபு படைப்பில் விஜய் இரு வேடங்களில் நடித்து வரும் GOAT படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல சன் டிவி நிறுவனமும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− three = 4

Back to top button
error: