சினிமா

ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்த மஞ்சும்மல் பாய்ஸ்!!

உலகம் முழுவதும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்தப் படம், கடந்த மாதம் பிப்ரவரி 22ம் தேதி வெளியானது.

கடந்த 2006ஆம் ஆண்டு குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால், 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக தயாரிக்கப்பட்ட மஞ்சும்மல் திரைப்படம், 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.

200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eight =

Back to top button
error: