சினிமா

‘அழகி’ திரைப்படம் வரும் 29ம் தேதி ரீ-ரிலீஸ்!

முதல் காதலை மையமாக வைத்து 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அழகி’ திரைப்படம் வரும் 29 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகவுள்ளது.

பார்த்திவன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் “அழகி”. உதயகீதா சினி கிரியேஷன்ஸ் உதயகுமார் தயாரிப்பில் தங்கர்பச்சான் இயக்கிய இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

தங்கர் பச்சன் தனது “கல்வெட்டு” சிறுகதையின் அடிப்படையில் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார். அதேபோல் இப்படத்தில் இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன.

இந்த நிலையில் அதிநவீன 4K தொழில்நுட்பத்துடன் இப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = seven

Back to top button
error: