குபேரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ், நாகர்ஜூனா நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் குபேரா. தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில், ஒரே சமயத்தில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கில் சேகர் கம்முலா முன்னணி இயக்குநராக இருப்பதால், இந்த திரைப்படத்தின் மீது, மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதனால், படத்தின் வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் ஜூன் 20-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
How do you react to this story?
Daily Tamilnadu on Google News
கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.
Add as Preferred Source
0 Comments