
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் த.வெ.க. தலைவர் விஜய். அதன் ஒரு பகுதியாக, நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 27), நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சார நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
த.வெ.க. வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாமக்கல் கே.எஸ். திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கு விஜயின் பிரச்சாரம் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நண்பகல் 12.00 மணிக்கு பொதுமக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
விஜயின் வருகையை எதிர்நோக்கி, இரு மாவட்டங்களிலும் த.வெ.க.வினர் உற்சாகத்துடன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சார நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.