
சென்னை, அக்டோபர் 01, 2025: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.240 அதிகரித்து, ரூ.87,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.2,000 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வார இறுதியில், ஒரு சவரன் தங்கம் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கள்கிழமை ரூ.86,160 ஆகவும், செவ்வாய்க்கிழமை ரூ.86,880 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதன்கிழமை இன்று, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,890 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.87,120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.161க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,61,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.