பாய்களில், படுக்கைகளில் பல வகைகள் இருக்கின்றன. அந்த காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்ப படுக்கை வாங்கி பயன்படுத்தினர். ஒவ்வொரு பாய்க்கும், படுக்கைக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன.
ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாய்களில் தீமை தான் நிறைந்து இருக்கின்றன. இந்த வகையில் கோரைப் பாய் பயன்படுத்தி உறங்குவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.
தயாரிப்பு முறை
கோரைப் பாய் ஆனது ஆற்றின் ஓரத்தில் வளர்கின்ற கோரைப் புற்கள் கொண்டு தயாரிக்கப்படும் பாய் ஆகும். கோரைப் புற்கள் ஆரம்பத்தில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்பிடிப்பு நிலத்தில் வளர்வதால் உறங்க சுகமான அனுபவம் அளிக்கும். உடல் சூட்டை தனித்து, குளிர்ச்சி அடைய செய்யும்.
உறக்கம்
உடலில் சூடு அதிகரிக்கும் போது உறக்கம் கெடும். கோரைப் பாய் உடலின் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருவதால் நல்ல உறக்கம் கிடைக்கும்.
காய்ச்சல்
உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்ட கோரைப் பாய் பயன்படுத்தி உறங்குவதால் காய்ச்சலும் குணமாகும் என கூறப்படுகிறது. அதிக உடல் சூட்டால் உண்டாகும் காய்ச்சலை தன் குளிர்ச்சி குணம் கொண்டு சரி செய்கிறது கோரைப் பாய்.
கணவன் – மனைவி உறவுக்குள் இந்த 3 குணாதிசயங்கள் இருந்தால் சண்டையே வராது. சண்டைகள், மோதல் என எல்லாவற்றிற்கு காரணம் இருவருக்கும் இடையே புரிதல் இல்லாதது தான். கணவன் – மனைவி உறவின் அடிப்படை அம்சம் அன்பு. கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆழமான அன்பை கொண்டிருக்க வேண்டும்.
கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, கடினமான காலகட்டங்களில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க வேண்டும். ஒருவருக்கொருவர் குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவதுடன் வாழ வேண்டும். தற்போது இந்த பதிவில் கணவன் – மனைவி இருவருக்கும் இருக்க வேண்டிய 3 முக்கியமான குணாதிசயங்கள் பற்றி பார்ப்போம்.
கணவன் – மனைவி உறவுக்குள் சண்டைகள் வருவது வழக்கமான ஒன்று தான். ஆனால், அந்த சண்டைகள் நீடிப்பது மிகவும் தவறு. எனவே இருவருமே எப்படிப்பட்ட சண்டை வந்தாலும், அன்று இரவு தூங்க செல்வதற்கு முன், அந்த சண்டைகளை மறந்து மகிழ்ச்சியுடன் சமாதானத்துடன் செல்ல வேண்டும் என முடிவெடுக்க வேண்டும்.
கணவன் – மனைவி இருவருமே, ஒருவருக்கொருவர் என்ன பிடிக்கும் என்பதை அறிந்து வைத்திருந்து, அவ்வப்போது சர்ப்பரைஸ் கிப்ட் கொடுங்கள். இது ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதலை வெளிப்படுத்துவதோடு, இருவருக்கும் இடையே மேலும் அன்பு அதிகரிக்க உதவும்.
அதேபோல் கணவன் மனைவி உறவுக்குள் வெளிப்படை தன்மை என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில், எந்த விஷயமாக இருந்தாலும் கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு இருக்க கூடாது. மேலும் அது செல்போன் பாஸ்வேதாக இருந்தாலும் சரி, மற்ற எந்த விஷயமாக இருந்தாலும், ஒளிவு மறைவு இல்லாமல் இருந்தால், இருவருக்கும் இடையே சந்தேகம் வராது. சமாதானம், சந்தோசம் நிலைத்திருக்கும்.
நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் (சித்த வைத்தியர்கள்) இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விசயங்களும் மறைந்து வருகின்றன. முன்பெல்லாம் பாம்பு கடியை பற்றி அவ்வளவாக பயப்பட மாட்டார்கள். கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியாக நம்புவார்கள்.
துவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பாம்பு கடி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது. நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை.
பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை. ஆனாலும் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் முதலுதவி கிடைத்து விட்டால் கடி பட்ட நபரை பிழைக்க வைத்து விடலாம் என்பது தான் அனுபவத்தில் கண்ட உண்மை.
இது தவிர கடிபட்ட நபர்கள் தன்னை கடித்தது என்ன பாம்பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு நச்சு முறிவு மருந்தை உடனடியாக தேர்வு செய்ய முடியும். பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் தடுப்பு மருந்துகள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், கடி பட்ட இடத்தில் இருக்கும் தசை அணுக்கள் செயலற்று போய்விடுகின்றன.
எனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போதே பாம்பின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் சில பாம்பு பிடிக்கும் குழு மக்களுக்கு பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பாம்பு பிடிப்பதும், அவர்கள் பாம்பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பாம்பு விஷத்தை முறித்துக்கொள்ளும் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் சாதாரண நபர்கள் பாம்புகளிடம் கடி பட்டால் பதறிவிடுகிறார்கள்.
பாம்பு கடித்ததும் ஐயோ….பாம்பு கடித்து விட்டதே என்று அதிர்ச்சியடைகிறார்கள். இப்படி ஏற்படும் அதிர்ச்சியும் பயமும் தான் அந்த நபரை மரணத்தின் விளிம்புக்கு அழைத்து சென்று விடுகிறது. பாம்பு கடித்து விட்டால் பதறக்கூடாது. இது தான் மிக முக்கியமானது. கடித்த பாம்பு தப்பித்து விட்டாலும் அதன் தோற்றத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் மருத்துவர்கள் சரியான விஷ முறிவு மருந்தை தேர்வு செய்ய முடியும்.
பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.
மருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பாம்பு கடி பட்ட நபர்களுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு. இந்த வாழைப்பட்டை சாறு பாம்பின் விஷத்தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை.
நாகப்பாம்பு அல்லது கருநாகம் கடித்திருந்தால் கடித்த இடத்தில் ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும்.
விரியன் பாம்பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட பற்குறிகள் காணப்படும்.
நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.
பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.
பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.
நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.
சில பாம்புகள் கடித்தால் ஏற்படும் அறிகுறிகள் :
நல்ல பாம்பு கடித்தால், கடிபட்ட இடத்தில் வலி இருக்கும். சிலருக்கு வலி தெரியாது. பார்வை மங்கும். கண் இமை சுருங்கும். நாக்கு தடிக்கும். பேச்சு குளறும். வாயில் எச்சில் வடியும். மூச்சு திணறும். நினைவு குறையும்.
கட்டு விரியன் கடித்தால் இந்த அறிகுறியுடன் வயிற்று வலியும் இருக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் வலி கடுமையாக இருக்கும். கடிபட்ட இடத்தில் வீக்கம், மூச்சுதிணறல், வாந்தி, சோர்வு, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.
1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா….?
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல…
2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா….? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..? கடுமையான வலி இருக்கிறதா..?
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்…
முதலுதவி:-
1. இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
2. காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.
3. பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.
4. பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது
5. இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.
6. பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும்.
7. பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை “அட்மிட்” செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
8. இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.
பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்…
எனவே பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். காரணம், சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கிய பாகங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்.
உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.
பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,
1.நல்ல பாம்பு
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு
5.கரு நாகம்
6. ராஜ நாகம்.
மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து”சீர நஞ்சு” (anti -venom) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.
இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த “சீர நஞ்சு” நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.
பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-
கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும்.
வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.
வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-
இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும், 10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.
ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.
இரவில் நச்சுப் பூச்சி ஏதேனும் கடித்து விட்டால் என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடி பட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்
இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்லபாம்பு என்றும்,
புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டுவிரியன் பாம்பு என்றும்
வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்,
கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்.
தேள்கடி மருந்துகள் :
எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள்கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.
கல்லில் சில சொட்டுத் தண்ணீரைத் தெளித்து அதில் புளியங் கொட்டையைச் சூடு உண்டாகும்படி தேய்த்துத் தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும்; நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்துவிடும்.
சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.
கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும். பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.
குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.
ஒற்றை மருத்துவம் :
சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர்.
நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.
பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.
வெறிநாய்க்கடி மருந்து :
வெறிநாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.
பாம்புக்கடி மருந்து :
பாம்பு கடித்து விட்டால் உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்கவைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்கவைத்தவன் பல்கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.
நஞ்சு முறிப்பு :
எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க, நாயுருவியின் விதையை வீசும்படி எடுத்து வெய்யலில் காயவைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும்.
உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும். வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்துவிட்டால் நஞ்சு முறிந்து போகும்.
சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது. நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு. ஆனால் சித்த மருத்துவத்தின் பயன்பாடுதான் இப்போது குறைந்து வருகிறது.
பருமனாக இருப்பவர்கள், எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து, அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து, சாப்பிட்டால் எடை குறையும்.
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு, பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி, முடி அழகு பெறும்.
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும். வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகத்தில் பரு வராமலும், வெளியில் கறுத்துப் போகாமலும் இருக்கும்.
ஒரு லிட்டர் இளஞ்சூடான நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும்,
சுருக்கத்துடனும் இருந்தால், ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன், பயத்தம் பருப்பு மாவை கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு, ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும். ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.
முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து, பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால், முட்டையுடன் முடியும் எளிதில் வரும். மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புது பொலிவடையும்.
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால், சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். தோல் வறண்டும், சுருக்கமாகவும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை ஸ்மார்ட்போனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்மார்ட் போன் அதிகமாக பயன்படுத்துவதால் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுவது தெரிந்ததே. மன ஆரோக்கியம் முதல் உடல் ஆரோக்கியம் வரை அனைத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இரவு தூங்கும் முன் ஸ்மார்ட் போனை பார்ப்பது கண்களை கடுமையாக பாதிக்கிறது. இருட்டில் போனை பார்க்கும் போது போனில் இருந்து வரும் பிரகாசம் கண் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. மூளையையும் பாதிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் நீல ஒளியால் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.
இருட்டில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் கண் பார்வை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். தலைவலி, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் மற்றும் கண் வறட்சி போன்ற அறிகுறிகளும் காணப்படுகின்றன. இது நீண்ட காலத்திற்கு கண்பார்வை இழப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இரவில் போன்களை உபயோகிப்பது தூக்கத்தை கடுமையாக பாதிக்கும். இது தூக்கத்திற்கு தேவையான ஹார்மோன்களின் உற்பத்தியில் தலையிடுகிறது. இது தூக்கத்தின் தரத்தை குறைக்கிறது. இது தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது. இதனால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நீண்ட நேரம் திரையை உற்றுப் பார்ப்பது கண்களின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது டிஜிட்டல் கண் திரிபு என்று அழைக்கப்படுகிறது. இது கண்பார்வை மங்கல், கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில், 8 வகை காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்கு, சிப்பி, வைக்கோல் காளான் என்ற, 3 வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
காளான் மருத்துவ பயன்கள்:
காளான், ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள், ரத்தத்தில் கலந்துள்ள டிரைகிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை, எந்தவித பாதிப்பும் இல்லாமல் ரத்தத்திலிருந்து வெளியேற்றி, பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
இதனால் ரத்தம் சுத்தமடைவதுடன், இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். ரத்த அழுத்தம் ஏற்படும்போது, உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். ரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால், சமநிலை மாறி உட்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இதை சரிசெய்ய, பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து, 447 மி.கி. உள்ளது. சோடியம், 9 மி.கி., உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான், மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால், பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக, காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில், 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு, சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.
எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள், தினமும் காளான் சூப் அருந்தி வந்தால், விரைவில் உடல் தேறும். காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால், பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்ப்பது நல்லது.
குளிர்காலத்தில் காணப்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று குதிகால் வெடிப்பு. குளிர் காலத்தில் வறண்ட காற்று வீசுவதால், குதிகால் தோலில் ஈரப்பதம் குறைகிறது. இதனால், சருமம் வறண்டு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும். குதிகால் வெடிப்பு வலி மற்றும் தொற்றுக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனையை சரி செய்ய பலர் சந்தையில் கிடைக்கும் கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இந்த பிரச்சனை ஏன் ஏற்படுகிறது? என்னென்ன குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி.. குளிர்காலத்தில் குதிகால் மிகவும் வறண்டு போகும் மற்றும் சரியான தோல் பராமரிப்பு இல்லாததால் உலர்ந்த குதிகால் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று குதிகால் தோலில் ஆழமாக செல்கிறது. இதன் காரணமாக தோல் ஈரப்பதத்தை இழக்கிறது, இது குதிகால் வெடிப்புக்கு முக்கிய காரணமாகும். மேலும், குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதை அதிகம் விரும்புவார்கள். இது சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தையும் நீக்குகிறது. இதனால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது.
குதிகால் வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட மாய்ஸ்சரைஸை தொடர்ந்து தடவ வேண்டும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதனால் குதிகால் மென்மையாகும். மாய்ஸ்சரைசரை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும்.
உங்கள் குதிகால் ஏற்கனவே வெடிப்பு இருந்தால், உங்கள் பாதங்களில் வாஸ்லைனை அடிக்கடி தடவ வேண்டும். இவ்வாறு செய்வதால் குதிகால்களில் ஈரப்பதம் அதிகரிக்கும். வறண்ட சரும பிரச்சனையை குறைக்க இது பயனுள்ளதாக இருக்கும்.
குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்கவும். ஆனால் இதுவும் நல்ல பழக்கம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். சற்று வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
கால்களில் வெடிப்பு ஏற்படுவதற்கு நீரிழப்பும் ஒரு காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். பொதுவாக குளிர்காலத்தில் குறைந்த அளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால் பருவத்தைப் பொருட்படுத்தாமல் தண்ணீர் எடுக்க வேண்டும். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
சீறுநீரக கல் பிரச்னை என்பது, இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கக்கூடிய நோயாக மாறி வருகிறது. சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்று திரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்குகிறது. சிறுநீர், சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே, சிறுநீர்ப் பைகளுக்கு வந்து, பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கி, வளர்ந்து அடைப்பு ஏற்படுத்துகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள்.
பரம்பரையாக சிறுநீரக கல் பிரச்னை ஒருவரைத் தாக்கலாம். பாரா தைராய்டு சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவும், நோய் தொற்று காரணமாகவும் சிறுநீரகத்தில் கல் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிறுநீரக கல்லை வெளியேற்ற, வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும்.
பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி., அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
சாப்பிடக்கூடாதவை: சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தற்போது, சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலகளவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாறி வரும் வாழ்க்கை முறை, உணவு உட்கொள்ளும் மாற்றம், உடல் உழைப்பு குறைதல் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்ய மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக நடைபயிற்சியை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயமாக நடைப்பயிற்சியை தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? வாரத்திற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும்? அதன் விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது நடக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோயிலிருந்து விடுபட நடைபயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்தில் குறைந்தது 5 நாட்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடப்பது நல்லது.
அப்படியானால், அரை மணி நேரம் நடக்காமல் அந்த நேரத்தையும் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் நடைபயிற்சியின் போது குறைந்தது 10 நிமிடங்களாவது இடைவிடாமல் ஒதுக்க பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை செய்தால் பலன் கிடைக்கும். நடை வேகம் விஷயத்திலும் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்கிறார்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மூன்று முதல் நான்கு மைல்கள் வேகத்தில் நடப்பது இன்சுலின் அளவை அதிகரித்து இதய பிரச்சனைகளை கட்டுக்குள் வைத்திருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதேபோல், சாப்பிட்ட பிறகு குறைந்தது 10 நிமிடங்களாவது நடக்க பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சர்க்கரை நோயால் அவதிப்படுகிறீர்களா..? குளிர்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குளிர் காலநிலை உங்களுக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது குறிப்பாக இரத்த ஓட்டத்தை பாதித்து தொற்று மற்றும் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் குளிர் காலநிலை காரணமாக, சரியாக சாப்பிடாமல் இருப்பது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க வழிவகுக்கும். அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
டிசம்பரில் குளிர் காலநிலை நீரிழிவு நோயாளிகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளில், சளி, இருமல், காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களை விட அதிகம். சீக்கிரம் குறையாது. அதனால்தான் உங்கள் உடலுக்குப் பொருந்தாத சூழலில் இருந்து தப்பிக்க வல்லுநர்கள் விரும்புகிறார்கள். அதற்கு வெதுவெதுப்பான உடைகள், தொப்பிகள் மற்றும் காதுகளை மூடும் வகையில் மப்ளர்களை அணிய வேண்டும். மருந்துகளையும் தவறாமல் பயன்படுத்த வேண்டும். குளிர் காலநிலையிலும் உடற்பயிற்சியை நிறுத்தக்கூடாது. நீங்கள் வெளியே செல்லாவிட்டாலும் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை முயற்சிக்குமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது சர்க்கரை நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் குளிர்காலத்தில் ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது மிகவும் அவசியம். புதிய காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் வழக்கமான உணவில் சேர்க்கப்பட வேண்டும். மேலும், காய்கறி சூப்கள், விதைகள், பருப்புகள் எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சளி மற்றும் காய்ச்சல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவ நிபுணரை அணுகவும். மேலும், இரத்த சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதித்தல், உடலை நீரேற்றமாக வைத்திருப்பது, குளிர்ந்த காலநிலையிலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.