தமிழ்நாடுமாவட்டம்

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலை பகுதியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்தது.

நாளை தேனி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உட்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோல் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− one = eight

Back to top button
error: