விளையாட்டு

2வது அரையிறுதி போட்டி: தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!!

2023 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதன்படி இன்று தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. லீக் ஆட்டத்தில் காயம்பட்ட ஆஸ்திரேலியா மீண்டும் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடவுள்ளதால் ஆட்டம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 109 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. தென் ஆப்பிரிக்கா 55 முறை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 50 முறை மட்டுமே வென்றுள்ளது. மேலும் 4 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த இரு அணிகளும் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இந்திய அணியுடன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 6 =

Back to top button
error: