விளையாட்டு

டி20 உலகக் கோப்பையில் இது 20வது அணி!

அடுத்த ஆண்டு T20 உலகக் கோப்பையை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் நடத்துகின்றன. இம்முறை 20க்கும் மேற்பட்ட அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன.

இந்த மெகா போட்டியில் விளையாட ஐசிசி சில சிறிய அணிகளுக்கும் வாய்ப்பளித்துள்ளது. இந்த அணிகளுக்கு தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த அணிகளுக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பிரிவில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளன. கடைசி அணியாக ஆப்பிரிக்க நாடான உகாண்டாவும் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. உகாண்டா இந்த உலகக் கோப்பையில் 20வது அணி ஆகும்.

தகுதிப் போட்டிகளில் அந்த அணி மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஐசிசி போட்டிக்கு உகாண்டா தகுதி பெறுவது இதுவே முதல் முறை. இதனை அந்த நாட்டில் கொண்டாடுகிறார்கள். இந்த முறை ஆப்பிரிக்காவில் இருந்து நமீபியா, உகாண்டா ஆகிய இரு நாடுகள் தகுதிப் போட்டிகள் மூலம் டி20 உலகக் கோப்பைக்குள் நுழைகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− five = one

Back to top button
error: