விளையாட்டு

ஆடவர் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் சாதனையை இந்தியா முறியடித்தது!!

ராய்ப்பூரில் நடந்த 4வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

டி20 போட்டியில் இந்தியா மிகவும் வெற்றிகரமான அணியாக மாறியுள்ளது. இந்திய அணி 213 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 136 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானின் சாதனையை இந்தியா முறியடித்தது. 226 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் 135 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

நியூசிலாந்து 200 போட்டிகளில் 102 வெற்றிகளையும், தென்னாப்பிரிக்கா 171 போட்டிகளில் 95 வெற்றிகளையும், ஆஸ்திரேலியா 181 போட்டிகளில் 95 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இதன் மூலம் டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த விஷயத்தை பிசிசிஐ ‘எக்ஸ்’ தளத்தில் அறிவித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirty nine − thirty one =

Back to top button
error: