ஆன்மீகம்

விஷ்ணு ஏன் கிருஷ்ண அவதாரம் எடுத்தார் தெரியுமா?

மாயக் கண்ணன் பிறப்பு கதைகள் சிறு சிறு வேறுபாடுகள் கொண்டு அவர்களின் ஊர் மற்றும் மொழிக்கு ஏற்றார்ப் போல் மாறுபடும். கிருஷ்ணன், கண்ணன், கோவிந்தன், மாதவன், கோபாலன் என்ற பலப் பெயர்களில் அழைக்கப்படுவர் விஷ்ணுவின் அவதாரம் ஆன ஸ்ரீ கிருஷ்ணர் ஆவர்.

கிருஷ்ண அவதாரம் எடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் பூமாதேவி. பாவச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் பாவம் செய்யும் மானிடர்கள் அதிகரித்து வருவதாகவும் பூமாதேவி வருந்தி விஷ்ணுவை வேண்டினார். அதற்கு விஷ்ணு சிறிது காலம் பொறுத்துக் கொள்ளுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றுக் கூறினார். பல காலம் கழித்து மீண்டும் விஷ்ணுவின் உதவியை நாடினார் பூமாதேவி. மேலும் அவரால் கொலைக் குற்றங்கள், அசுரர்கள் செய்யும் கொடூரங்கள், தீயக் காரியங்களில் ஈடுபடும் மக்களின் எடையை தாங்க முடியவில்லை என்றும் நீங்கள் கூறியது போல் இதுவரை பொறுமையைத் தான் கடைப்பிடித்து வருவதாகவும் கூறினார்.

என்னால் முடிந்தவரை பொறுத்துவிட்டேன் இனியும் தாங்க என்னால் முடியாது நீங்களே இதற்கு ஒருவழிச் சொல்லுங்கள் என்று வருத்தமாய்க் கூறினார் பூமாதேவி. பூமாதேவியின் நிலைமையை உணர்ந்த விஷ்ணு சரி நான் அவதாரம் எடுக்க நேரம் வந்துவிட்டது எனக் கூறினார். பாவச் செயல் செய்யும் அனைவரும் இறக்க போவதாகக் கூறினார். மேலும் தேவர்களை யது வம்சக் குலத்தில் பிறந்து தனக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று தேவர்களுக்கு ஆணையிட்டார். இதைக் கேட்ட பூமாதேவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

யது குல அரசனாக இருந்தவன் சூர சேனன் இவரது மகன் வசுதேவர் இவருக்கும் தேவகர் என்பவரின் மகள் தேவகிக்கும் திருமணம் நடந்தது. தேவகரின் அண்ணன் உக்கிர சேனன் அரசராக இருந்தார். அவரின் மகன் கம்சன். தேவகி சொந்த சித்தப்பா மகள். கம்சனுக்கு கூட பிறந்த தங்கை யாரும் இல்லை. தேவகி அன்பும் பொறுப்பும் அமைதியும் உடைய பெண் என்பதால் தனது தங்கையின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தான் கம்சன்.

ஆனால் வெளி உலகத்திற்கு மிக கொடூரமான மோசக்காரன், மக்களை தேவையற்று துன்புறுத்துவது, கடவுளின் மீது நம்பிக்கையற்று நான் தான் எல்லாம் என்று தலைக் கணம் பிடித்த ஆணவத்துடன் நடத்துக் கொண்டான். ஆகையால் இவரை அழிக்க வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது மகன் கிருஷ்ணனாக பிறந்து கம்சனை அழித்தார். மேலும் பாரதப் போரை உருவாக்கி பல அரக்கர்களையும் தீமைச் செய்தவர்களையும் அழித்தார். இறுதியில் பூமாதேவியும் மகிழ்ந்தார். இது தான் விஷ்ணு, கிருஷ்ண அவதாரம் எடுக்க காரணம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 2 =

Back to top button
error: