ஆன்மீகம்

இன்றைய நாள் (20-03-2024) உங்களுக்கு எப்படி இருக்கும்..?

மேஷம்

இன்று வரவுக்கு மீறிய வீண் செலவுகள் சிலரை ஆதங்கப்படுத்தலாம். எனினும், கவலை வேண்டாம் ஏற்ற நேரத்தில் சேமிப்பு உயரும். உத்யோகத்தில் இருக்கும் பெண்கள் குடும்ப விஷயங்களை அந்நிய நபர்களிடத்தில் பகிர வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் வீண் சண்டைகளை தவிர்க்கலாம். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களைப் புரிந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் மற்றும் நேர்முக – மறைமுக எதிர்ப்புகளுக்கு இடையே முடிந்த வரையில் லாபம் ஈட்டுவீர்கள். வர வேண்டிய வாய்ப்புகள் தாமதம் ஆனாலும் கூட இறுதியில் வந்து சேரும்.

ரிஷபம்

சமயோஜித புத்தியால் எல்லா பிரச்சினைகளையும் எளிதாகச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்பு கூடும் நாள்.

மிதுனம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

அடுக்கடுக்கான வேலைகளால் அவதி கொள்ளாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கவனம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி

கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்டநாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

துலாம்

தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவரச் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

விருச்சிகம்

மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்‌‌. உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

தனுசு

இன்று அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தமான பாதிப்புகள் சிலருக்கு உண்டாக இடம் உண்டு. தொழில், வியாபாரத்தில் இருக்கும் போட்டி, பொறாமைகளை எல்லாம் சமாளித்து நீங்கள் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு முன்பு இருந்த தேக்க நிலை மற்றும் பணியில் இருந்த முரண்பாடுகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல் – வாங்கலில் பெரிய தொகையை பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் உடல் நலக் குறைவு ஏற்பாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தீய நண்பர்கள் சகவாசத்தை தவிர்க்கப் பாருங்கள்.

மகரம்

சில வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது. அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கும்பம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

இன்று உங்களுக்கு சகல விதங்களிலும் ஏற்றம் மிகுந்த பலன்கள் எல்லாம் ஏற்படும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் குறையும். பொருளாதாரம் நல்ல விதத்தில் மேம்படும். பயணங்கள் வெற்றியைத் தரும். பெரும்பாலும் உங்கள் முயற்சி வீண் போகாது. எண்ணியது எண்ணியபடி நடந்தேறும். நல்ல திருப்பங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏற்படும். புதிய வீடு, மனை வாங்கக் கூடிய யோகம் எல்லாம் கூட கிடைக்கப்பெறும். சமூகத்தில் சில பெரிய மனிதர்களின் அறிமுகம் எல்லாம் கிடைக்கப்பெறும். நன்மையான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 2 =

Back to top button
error: