
அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில், நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘தணல்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது.
டிரெய்லரைப் பார்க்கும்போது, காவல்துறைக்கும், ஒரு போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் மோதல்களின் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அதர்வா, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள், பரபரப்பான திருப்பங்கள், சமூக பிரச்சனைகளை அலசும் கதைக்களம் என ரசிகர்களை கவரும் அம்சங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
‘தணல்’ திரைப்படம், வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டு நாளை நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.