7ஜி ரெயின்போ காலனி- 2: விரைவில் டீசர்!
தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத காதல் காவியமாக அமைந்த திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’. செல்வராகவன் இயக்கத்தில், 2004-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில், முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ரவி கிருஷ்ணாவே இந்த பாகத்திலும் நடிக்கிறார். படத்தின் கதை, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சமீபத்திய தகவல்களின்படி, படத்தின் 70% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. டீசர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமும் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Posted in: சினிமா