Uncategorized

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: 60 பேர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிராகஸ் சிட்டி கச்சேரி அரங்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, ​​மண்டபத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கட்டிடத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், இசை ஆர்வலர்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் இருக்கைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டு உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மண்டபத்தில் சிக்கியிருந்த பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். ஆசாமிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பலர் பயந்து ஓடுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 2002 ஆம் ஆண்டில், செச்சென் போராளிகள் மாஸ்கோவில் உள்ள ஒரு திரையரங்கைத் தாக்கி 129 பேரையும் 41 போராளிகளையும் கொன்றனர். 2004 ஆம் ஆண்டு, பெஸ்லானில் உள்ள ஒரு பள்ளிக்குள் நுழைந்த செச்சென் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 330 பேர் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− one = two

Back to top button
error: