தமிழ்நாடுமாவட்டம்

‘மிக்ஜம்’ புயல் எதிரொலி.. நாளை 4 மாவட்டங்களில் பொது விடுமுறை!!

வங்கக் கடலில் உருவான புயலுக்கு ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை நீடிக்கிறது. புயல் தற்போது மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இந்த புயல் வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து பின்னர் 5ம் தேதி மாலை நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், புயல் எதிரொலி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

பால், குடிநீர், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள் போன்றவை நாளை வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

65 − sixty =

Back to top button
error: