தமிழ்நாடுமாவட்டம்

3 மணி நிலவரம்: தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக தருமபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதற்கு அடுத்தபடியாக நாமக்கல்லில் 57.67% வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவானது, இது மாநிலத்திலேயே மிகக் குறைந்த வாக்கு சதவீதம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

66 − fifty seven =

Back to top button
error: