இந்தியாதமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் நிறைவு!

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெற உள்ளதால், தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இதில், 39 இடங்களைக் கொண்ட தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. இதனால், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில், பிரச்சாரம் முடிந்ததும், யாரும் எந்த வகையிலும் வாக்கு சேகரிக்க வேண்டாம் என்றும், வாக்காளர்கள் புகார் தெரிவிக்க விரும்பினால், 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 8 = one

Back to top button
error: