இந்தியாவணிகம்

மே 1 முதல் புதிய கட்டண விதிகள் – ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு

நடப்பு 2024-25 நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து, பல்வேறு வங்கி நிறுவனங்கள் கட்டண விதிகளில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றன.

அதன்படி, தற்போது ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐஎம்பிஎஸ், டிடி உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிகள் மே 1, 2024 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண மாற்றங்கள்:

  • IMPS ஒரு பரிவர்த்தனை ரூ.1000 க்குள் இருந்தால் ரூ.2.50 வசூல் செய்யப்படும். அதேபோல் ரூ.1,000 முதல் ரூ. 25,000 வரை இருந்தால் ரூ.5, ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை இருந்தால் ரூ.15 வசூலிக்கப்படும்.
  • ஒரு ஆண்டுக்கு 25 செக் புக் வரை கட்டணம் இல்லை. அதற்கு மேல் ஒவ்வொன்றுக்கும் ரூ.4 செலுத்த வேண்டும்.
  • டெபிட் கார்டுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.200, கிராமப்புறங்களில் ரூ.99ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • கையொப்பம் சரிபார்ப்பு மற்றும் செக் நிறுத்த கட்டணம் தலா ரூ 100.
  • ECS/NACH டெபிட் ரிட்டர்ன்ஸ் காரணங்களுக்கு தலா ரூ.500.
  • DD/PO-வின் மறுமதீப்பீடு, நகல் மற்றும் ரத்து போன்றவற்றிற்கான கட்டணம் ரூ.100 ஆக மாற்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− two = three

Back to top button
error: